|
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
சேக்கிழார் துதி
தில்லை வாழ் அந்தணரே முதலாக சீர்படைத்த தொல்லையதாம் திருத்தொண்டத்தொகையடியார் பதம் போற்றி ஒல்லையவர் புராணகதை உலகறிய விரித்துரைத்து செல்வமல்குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி
|
நால்வர் துதி |
வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கன்மிதப்பில் அணைந்த பிரான் அடி போற்றி
வாழி திருநாவலூர் வன்றெண்டர் பதம் போற்றி
ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள் போற்றி
தென்னாடுடைய சிவனே போற்றி
ெந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
|
| |
|
சிவ பரம்பொருளின் அருளாற்றலை முழுமையாகப் பெற்றுச் சிறந்தது செந்தமிழ் நாடாகும். இங்குதான் இறைவன் அறுபத்து மூன்று அடியார்களிடம் தோன்றி உறவாடியும், பகையாடியும், நகையாடியும், விளையாடியும், இறுதியில் முக்தியும் நல்கினான்.
தேவரும் மூவரும் காண முடியாத சிவபெருமானின் மலரடிகடிள் பலமுறை நிலந்தோய நடந்த ஞானபூமி தமிழ்நாடு.
சைவத்தின் மேலான சமயம் வேறில்லை என்பதற்கிணங்க சாத்திரம், தோத்திரம், வரலாறு (பெரிய புராணம்) என்ற மூன்றும் இறைவனின் மூன்று கண்ணிலிருந்து தோன்றியது போல மேம்பட்டு விளங்குகின்றன.
சிவவழிபாடு. குருவழிபாடு. மற்றும் அடியவர் வழிபாட்டையும் சேர்த்து ஒருநிலையில் வைத்துப் போற்றுவது சைவ நெறியேயாகும்.
அடியார் வழிபாடு எளிதும் இனிதுமாகும். இதுவே அறுபத்துமூவர் வழிபாடாகும். இவ்வழிபாட்டின் மூலம் இகபர சுகங்களையும் முக்தியையும் பெறலாம். அறுபத்துமூவர் திருப்பணி மன்றம் இக்கோட்பாட்டை முன்நிறுத்தியே துவங்கப்பட்டது. நாயன்மார்கள் தோன்றிய தலங்கள்தோறும் அவருக்கு தனி ஆலயமமைத்து அவர்களின் சிறப்பை வெளிப்படுத்தி அவர்களின் வழி நடத்தலே இம்மன்றத்தின் குறிக்கோள். திருமுதுகுன்றத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் எளிமையாக துவங்கிய இம்மன்றம் மெள்ள துளிர்த்து கிளைவிட்டு வளர்ந்து வருகிறது.
வலையத்து உள்சென்று மேலும் இம்மன்றத்தின் பணிகணைப் பார்த்து இரசிப்பீர்.
நீங்களும் இதில் பங்கேற்று அடியவர் அறுபத்து மூவரின் சிறப்பினை வளர்ப்பதில் கை கொடுக்கலாம்.
|
|
|
 |
 |
| |
| Flash News |
|
|
|
|
|
| |
|
|